சின்னம்மை ♡ வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. சின்னம்மை ஏற்படக் காரணங்கள் : ♡ வளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடலில் வெப்பம் ஏற்படுகிறது. ♡ உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. ♡ இவற்றில் ஒன்றுதான் ஷவேரிசெல்லா ஜாஸ்டர் எனும் வைரஸ் கிருமி மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது. சின்னம்மை வராமல் தடுக்கும் முறைகள் : ♡ குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும். ஆரம்பத்திலேயே இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம். ♡ ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டு, அடு...