குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

 குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

♡ சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவதை தடுக்கலாம்.


♡ குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். 


♡ கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது.


♡ குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


♡ குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி சைக்கிள் ஓட்டும் பயிற்சி.


♡ உடல் பருமன் அதிகமாக இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். 


♡ குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. வீட்டுக்குள்ளும் காலணி அணிந்துதான் நடக்க வேண்டும்.


♡ பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டும்.


♡ அழுத்தமான ஷுக்களை அணியக்கூடாது. 

Comments

Popular posts from this blog

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்