மன அழுத்தம் வந்தபின் காக்கும் முறைகள்

 மன அழுத்தம் வந்தபின் காக்கும் முறைகள்

♡ எத்தகைய பதட்டத்தையும் தனித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேட்கலாம் அல்லது பாடலாம்.


♡ மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழைத்து அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் அழுத்தம் குறையும்.


♡ அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்.


♡ வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட வேண்டும்.


♡ நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.


♡ நகைச்சுவை உணர்ச்சிதான் அழுத்தத்திற்கான உரிய மருந்தாகும்.


♡ மன அழுத்தம் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம்.


♡ தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும்.


♡ உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது மிகவும் நல்லது.


♡ செல்லப் பிராணிகள் இருந்தால் அதோடு விளையாடலாம்.


Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்