டயட்டில் இருக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியவை
டயட்டில் இருக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியவை !!
👉 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லா வயதினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனை உடல்பருமன் ஆகும். பல நோய்களுக்கு மூல காரணமாகும் இந்த உடல்பருமன் இந்தியாவில் அதிகளவில் அதிகரித்து வருகிறது. ஏதேதோ வழிகளில் உடல் பருமனை சரிசெய்ய இன்றைக்கு பலரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். உடல்பருமனை குறைப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். நம் உடலுக்குத் தேவையான கலோரிகளைவிட நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு அதிக அளவில் இருப்பதால், உடல்பருமன் ஏற்படுகிறது. இப்போது டயட்டில் இருக்கும் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டியவை எவை என்று பார்ப்போம்.
கட்டாயம் செய்ய வேண்டியவை :
👉 முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒரு நாளைக்கு 800 முதல் 1,500 கலோரிகள் போதுமானது. அதாவது, ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு மடங்கு உணவை எடுத்துக்கொள்பவராக இருந்தால், அதை தவிர்த்து குறைவான கலோரிகள் உள்ள உணவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
👉 குறைவான கலோரி கொண்ட உணவுகளான பருப்புகள், கோதுமை, தானியங்கள், பழங்கள், வெள்ளரி, பாதாம் முதலியவை உடல்பருமனை வேகமாகக் குறைக்க செய்யும் ஆற்றல் கொண்டது. எனவே இந்த உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சியும் செய்யும் போது வேகமாக உடல் எடை குறையும். நாம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது 10 நிமிடங்களிலிருந்து தொடங்கி, தொடர்ந்து சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டி 30 நிமிடங்கள் வரை செய்தால் நிச்சயமாக உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம்.
👉 கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் உடல்பருமனைக் குறைப்பதோடு, பிற நோய்களிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
👉 சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்புகளை உணவாக எடுத்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் குறைவான கலோரி கொண்ட உணவு, தேவையான வைட்டமின்கள், மினரல்கள், உணவு உட்கொள்ளும் முறை போன்றவை அதிகப்படியான கலோரிகளையும், கொழுப்பையும் குறைக்கிறது.
👉 நம்மில் பலர் டயட்டில் இருக்கும்போது மைதாவால் ஆன உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இது சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே மைதாவால் ஆன உணவுப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
👉 பெரும்பாலும் நம் டயட் முறைகளில் காலை உணவாக பழச்சாறு எடுத்துக் கொள்வோம். ஆனால், டயட் இருக்கும் போது பலர், பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொள்வார்கள். இது மிகவும் தவறு. ஐஸ் கட்டி, சர்க்கரை சேர்க்காத ப்ரெஷ் ஜூஸ் அருந்துவது தான் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
Comments
Post a Comment