வயிற்று வலி வராமல் தடுக்கும் முறைகள்
வயிற்று வலி வராமல் தடுக்கும் முறைகள்
♡ ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி ஏற்படாமல் தடுக்கலாம்.
♡ உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக சாப்பிட்டால் உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி ஏற்படும்.
♡ உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
♡ வயிற்றுப்புண், மாதவிடாய் உட்பட எல்லா வயிற்று வலிகளுக்கும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வெந்நீரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு துணியால் சுற்றிக்கொண்டு, வயிற்றில் ஒத்தடம் தரலாம்.
♡ இரைப்பை அழற்சி அல்லது செரிமானக்குறைபாடு இருந்தால், வயிற்று வலியுடன் புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் இருக்கும்.
Comments
Post a Comment