முடி உதிர்தல்

முடி உதிர்தல்

♡ நம் தலையில் சுமார் 1,00,000 முடி இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் முடி உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும். ஆனால் எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமான அளவில் தலைமுடி உதிர்கிறதோ, அப்போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.


♡ இந்நிலையை அலோப்பேசியா ஏரியேட்டா என்று அழைப்பர். இந்நிலை இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும். ஆனால் மீண்டும் முடி வளராமல் வழுக்கை ஏற்படும். பொதுவாக இப்பிரச்சனையால் 40 - 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 


♡ ஆயுர்வேதத்தில் பித்தம் உடலில் அதிகம் இருந்தால், தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்று சொல்லப்படும். முடி உதிர்வை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி காண்போம்.


முடி உதிர்வதை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள் : 


♡ ஒரு கப் மருதாணி இலை, கடுக்காய் தோல் - 4, டீ டிகாக்ஷன் ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு கப், துளசி இலை - ஒரு கப், கொட்டை நீக்கிய நெல்லிக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்து, வாரம் ஒரு முறை தலையில், சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு, இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் தலைமுடி நன்கு வளர்வதோடு, வாசனையாகவும் இருக்கும்.


♡ முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.


♡ பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கி சாறு எடுத்து அதை வழுக்கை தலையில் தடவிவர முடி வளரும். மேலும் கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.


♡ துளசி விதைகளை பொடி செய்து விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.


♡ பிராமி என்னும் ஆயுர்வேத மூலிகை, பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.


♡ திரிபலா என்பது மூன்று மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேதத்தில் தலைமுடி பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் ஓர் அற்புதமான பொருள். இதனை மாத்திரை வடிவிலோ, டீ அல்லது பொடி வடிவிலோ பயன்படுத்தலாம். இது தலையில் உள்ள திசுக்களை புத்துணர்ச்சியடையச் செய்யும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்யும். திரிபலா பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 3 - 4 முறை தடவி ஊற வைத்து அலசி வர வேண்டும்.


♡ ஆளி விதையில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள ஒமேகா - 3 ஃபேட்டி அமிலம், வழுக்கையைத் தடுக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆளி விதையை உணவில் சேர்த்து வருபவர்களின் தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும். இதற்கு ஆளி விதையில் உள்ள சத்துக்கள் தான் காரணம்.


♡ ஆளி விதையை உணவில் சேர்த்து வருவதன் மூலம் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதற்கு ஆளி விதையை மில்க் ஷேக் உடன் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தினமும் காலையில் ஆளி விதையை பொடி செய்து நீரில் கலந்து குடித்து வரலாம்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்