காய்ச்சல்

 காய்ச்சல்

♡ காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல. அது ஒரு அறிகுறி. பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது, இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும். அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். 


♡ சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும்.


காய்ச்சலுக்கான காரணங்கள் :


♡ வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளின் காரணமாகவோ, கொசு, ஈ போன்றவற்றினால் நம் உடலில் உருவாகும் கிருமிகளின் பாதிப்பினாலோ காய்ச்சல் ஏற்படும்.


♡ நம் உடலிலுள்ள சில மென்மையான கொலாஜன் திசுக்கள்,உடலில் சில நச்சுப் பொருட்களால் அழிக்கப்படும் போதும் காய்ச்சல் வரலாம். 


♡ ஹெச்.ஐ.வி பாதித்தோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் வரலாம். 


♡ பெண்களுக்கு சிறுநீரகத் தொற்றின் காரணமாக காய்ச்சல் வரும். 


♡ காசநோய் இருந்தாலும் காய்ச்சல் வரும். பொதுவாக காசநோய் என்பது இருமல் தான்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்