வயிற்று வலி வயிற்று வலி என்றால் என்ன? ♡ வயிற்று வலி பொதுவான நோயாகும். பெரும்பாலான நேரங்களில் இது ஆபத்தில்லாதது போல தோன்றும். ஆனால், சில கடுமையான நோய்களுக்கு இது அறிகுறியாக அமையும். காரணங்கள் : ♡ வயிற்றில் குடல்புண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, செரிமான குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை, குடல் அழற்சி, குடல் வால் அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி மற்றும் பித்தப்பைக் கற்கள் போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுவலி ஏற்படும். ♡ மேல் வயிற்றில் வலி உண்டானால், அது இரைப்பைப் புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக இருக்கும். ♡ இரவு நேரத்தில் மட்டும் வயிற்றுவலி வந்தால் அதற்கு குடல்புழு காரணமாகும்.